நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது ஏன் ? என்று கேட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மத்திய அரசாங்கம் எந்த ஒரு மாநிலத்தையும் புறந்தள்ளி வைக்க முடிவு எடுக்காது என்று கூறியுள்ளார்.