Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இதுல ஷாப்பிங் செய்யுங்க….. 70 சதவீதம் தள்ளுபடி பெறுங்க….. எஸ்பிஐ-யின் அற்புதமான சலுகை….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால் இன்றே செய்யுங்கள். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தால் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சிறந்த பிராண்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளை நீங்கள் பெறலாம் . யோனோ செயலி மூலம் ஆர்டர் செய்தால் பிராண்டின் அடிப்படையில் பெரியதள்ளபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவார்கள் என்று வங்கி ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் இதனை செய்ய நீங்கள் முதலில் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று யோனோ ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பிறகு இந்த செயலியை உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யுங்கள். இதன் பிறகு இந்த செயலில் இருந்து  டைட்டன், லைஃப்ஸ்டைல், ட்ரெண்ட்ஸ், அஜியோ, பிபா போன்ற பிராண்டுகளில் இருந்து சாப்பிங் செய்து கொள்ளலாம். நீங்கள் ஆர்டர் செய்யும் பிராண்டுகளுக்கு 70 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் எப்படி அதிக பலன்களை பெறலாம் என்பதை ஏபிசிஐ தனது ட்விட்டர் மூலம் விளக்கியுள்ளனர். செயலி மூலம் வெவ்வேறு பிராண்டுகளில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டில் கிடைக்கும் தள்ளுபடிகளுடன் தனித்தனியாகச் சேமிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் யோனோ செயலில் ஷாப்பிங் செய்ய பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தனித்தனி தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகள் உள்ளது.

Categories

Tech |