டிவி விவாதங்களில் தேமுதிக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உடைய கொடி நாள் விழாவில் தலைமை கழகத்தில் கேப்டன் அவர்களால் கொடியேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உடைய 21வது கொடி நாள் விழா. இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது.
கட்சி ஆரம்பித்து 16 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். இந்த கொடி நாளில் தலைமை கழகத்தில் தலைவருடைய கைகளால் கொடி ஏற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் இன்றைக்கு பட்டி தொட்டி எல்லாம் கொடி நாள் விழா கொண்டாடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பும் இப்போது சொல்லப் போறோம்.
தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பல வருடமாக கேப்டனிடம் கோரிக்கை வைத்து கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால் விவாதங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நமது நிர்வாகிகளும் போய் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து கேப்டனிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கொடி நாள் விழா கொண்டாடப்படும் இந்த நல்ல நேரத்தில் கேப்டன் அவர்கள் இனிமேல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அனைத்து விவாதங்களில் நமது கழகத்தின் சார்பாக பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இனி எந்த தொலைக்காட்சியில் இருந்து அழைக்கிறீர்களோ… அந்த இடத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வந்து விவாதத்தில் பங்கேற்பார்கள். யார் அந்த விவாதத்தில் பங்கேற்க போகிறார்கள்? என்பதை தலைமை கழகம் அறிவிக்கும் என பிரேமலதா தெரிவித்தார்.