Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இதுவரைக்கும் யாருமே எடுக்கல….. இந்திய ஸ்பின் பவுலர்கள் புதிய சாதனை..!!

சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்களே வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சுழல் பந்துவீச்சினை தாக்குப் படிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 15.4 ஓவரில் 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்..

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் டாப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்களே வீழ்த்தியது இதுவே முதல் முறை என்ற சாதனையை இந்தியா பந்துவீச்சாளர்கள் பெற்றுள்ளனர்.

Categories

Tech |