Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரையிலும் இழப்பீடு கொடுக்கல…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வள்ளியப்பன்பட்டியில் ராமாயி என்பவர் வசித்து வருகிறார். மூட்டை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயமடைந்த ராமாயிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் 2,33,639 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரையிலும் போக்குவரத்து கழகம் ராமாயிக்கு நஷ்டஈடு வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக ராமாயி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதனை விசாரித்த நீதிபதி பிரபாகரன், ராமயிக்கு வழங்கவேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்ட பேருந்தான சேலம் கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசுப் பேருந்தை கோர்ட்டு அமினா ராமசாமி, வழக்கறிஞர் பிரபு, மனுதாரர் ராமாயி ஆகியோர் முன்னிலையில் ஜப்தி செய்துள்ளனர்.

Categories

Tech |