“அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆவதற்கு 75ஆண்டுகள் ஆகியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள் குறித்து பாளையங்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியை எல்.முருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்தவர்களின் தியாகத்தை அறிந்து கொள்ள இளைய தலைமுறையினர் முன் வர வேண்டும். இதுவரை அருந்ததியர் சமுதாயத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆவதற்கு 75ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்த சமுதாயம் மீது அக்கறை கொண்டு இந்த சமுதாயத்தை சேர்ந்த எனக்கு மத்திய அமைச்சர் பதவியை தந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.