இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதில் துணை அதிபர் கமலஹாரிசும் பங்கேற்றுள்ளார்.
இதனை அடுத்து அதிபர் ஜோபைடன் தெற்காசிய சமூகத்தினர் இடையே பேசும்போது தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்து பேசி உள்ளார். அவர் பேசும்போது உலகிற்கு நாம் ஒவ்வொருவரும் ஒளியை கொண்டுவரக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறோம் என நினைவுபடுத்துவது இந்த தீபாவளி பண்டிகை. அமெரிக்க அல்லது 75 வருட கால விடுதலை கொண்டாடும் இந்தியாவில் வசிக்கும் மக்கள் ஜனநாயகத்திற்கான வாழ்வில் ஒவ்வொரு நாளும் இதனை செய்து வருகின்றோம். மேலும் உங்களை வரவேற்பதில் நாங்கள் கவுரவம் அடைகின்றோம் வெள்ளை மாளிகையில் இல்லாத விதமாக பெரிய அளவில் முதன்முறையாக தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வரலாற்றில் இல்லாத விதமாக அதிக அளவில் ஆசிய அமெரிக்கர்களை நாம் கொண்டிருக்கின்றோம். அமெரிக்க கலாச்சாரத்தின் மகிழ்ச்சிக்குரிய பகுதியாக தீபாவளி கொண்டாட்டங்களை ஆக்கியதற்கு உங்களுக்கு நன்றி கூற விரும்புகின்றோம் என கூறியுள்ளார். நமது நாடு சமூகத்திற்கு சேவை செய்தும் பாதுகாத்து வருகின்றனர் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தும் ஒவ்வொருவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டு உரிமைகளை மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தெற்காசிய சமூகத்தினருக்கு இந்த நாளில் நாங்கள் நன்றியை கூற விரும்புகின்றோம் தெற்காசி அமெரிக்கர்கள் நம்முடன் ஒன்றிணைந்து நாமெல்லாம் ஒரே தேசம் என்று ஆன்மாவை பிரதிபலிக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.