Categories
மாநில செய்திகள்

இதுவரை இல்லாத அளவு – அரசு அதிகாரபூர்வ பரபரப்பு…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் மட்டும் தான் என பரபரப்பு செய்தியை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |