விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தியாவில் தமிழகத்தில் தான் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அதிகம்.
அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்துடன் மகாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் இருப்பதாகவும் தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்வதாகவும் இந்த பெருமை போல இந்தியாவிலேயே போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கீழடி ஆதிச்சநல்லூர் மற்றும் வெம்பக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் 2500 வருடங்கள் பழமையானதாக இருப்பதாகவும் இதுவரை நம் முன்னோர்கள் போதைப் பொருள் வஸ்து பயன்படுத்தியதற்கான எந்த தடையும் கிடைக்கப்பெறவில்லை என கூறியுள்ளார்.
இளைய சமுதாயம் பேரழிவை நோக்கி போவதாக ஒரு வித பய முதல்வருக்கு வந்தால் சமுதாயத்தின் நல்வழிப்படுத்த தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் மாணவர்கள் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றி உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டால் முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போதைப் பொருள் உறுப்பினர் பேரணியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருள் இல்லா உலகம் படைப்போம், தேடாதே தேடாதே போதை பொருளை தேடாதே, தவிர்ப்போம் தவிர்ப்போம் போதை பொருளை தவிர்ப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றுள்ளனர். இந்த பேரணி ஆட்சியர் அலுவலகம் தொடங்கி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றுள்ளது.