Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை எந்த வீரரும் இப்டி விளையாடல!…. வரலாற்று சாதனை படைத்த சூர்யகுமார்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். இவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64, 53, 40, 39, 34, 31 என அனைத்து போட்டிகளிலும் 30+ ரன்களை அடித்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்த ஒரு பேட்ஸ்மேனும் இப்படி முதல் 6 இன்னிங்ஸ்களில் 30+ ரன்களை எடுத்தது கிடையாது. டாம் கூப்பர், பக்கர் ஜமான் ஆகியோர் மட்டும் முதல் 5 இன்னிங்ஸ்களில் 30+ ரன்களை அடித்துள்ளனர். இந்த நிலையில் அதிகபட்ச ரன்களை குவித்த சூர்யகுமாரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |