நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழகம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
மேலும் நமது தமிழக அரசின் திட்டங்களான இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதனை பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.