Categories
மாநில செய்திகள்

இதுவரை சொல்லாத சொல்!…. இபிஎஸ்-ஐ சாடிய ஓபிஎஸ்…. பரபரப்பு பேச்சு….!!!!

மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலிலிருந்து விலக தயாரா? எனவும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை பயன்படுத்தாத சொற்றொடரால் எடப்பாடி பழனிசாமியை தாக்கியிருக்கிறார் ஓபிஎஸ். நம்பிக்கை துரோகம் செய்து பதவி பெற்றது யார் யார் என்று மக்களுக்கு புரியும் எனவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Categories

Tech |