தன் பெயரிலேயே விஜய் இதுவரை 7 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இதுவரை தனது பெயரிலேயே 7 படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடந்த 1992-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் தன் பெயரிலேயே நடித்திருந்தார். இதையடுத்து விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் விஜய், கவிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தனர்.
மேலும் அதிரடி காதல் படமாக வெளியான வசந்தவாசல் படத்தில் விஜய், சுவாதி, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் தன் பெயரிலேயே நடித்திருந்தார். அதேபோல் நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யா இருவரும் தங்களது பெயரிலேயே நடித்திருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பிரியமானவளே படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் விஜய், பிரியா ஆகிய கேரக்டரில் நடித்திருந்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி. விஜய் இந்த படத்தில் விஜய் என்ற போலீஸாக நடித்திருந்தார்.