பிக் பாஸ் சிவின் இறுதி பட்டியலில் இடம் பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஓளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், ஜி. பி .முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது வரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், ஆயிஷா உள்ளிட்டோர் மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டனர். ஆனால் சிவின் தற்போது வரை நாமினேஷன் கூட செய்யப்படாமல் உள்ளார்.
இந்நிலையில் திருநங்கையான இவர் அனைத்து டாஸ்க்கிலும் தனது தனித்துவ திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் வீட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளில் தலையிட்டு நியாயமான கருத்துக்களை தெளிவாக முன்வைத்து வருகிறார். இதனால் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் அஷிம் , விக்ரம் போன்ற கடுமையான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியில் தங்களுக்கான மக்கள் ஆதரவை பார்த்து உள்ளனர். ஆனால் இவர் இதுவரை நாமினேஷன் ஆகாததால் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் சிவின் பிக் பாஸின் இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார் என அவர்களது ரசிகர்கள் கூறுகின்றனர்.