Categories
உலக செய்திகள்

“இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்”…? உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!!!

உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்றி சென்ற 170 க்கும் அதிகமான உக்ரேன் சரக்கு கப்பல்கள் துருக்கியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்குள்ள உக்ரைன் சரக்கு கப்பல்களில் ரஷ்யா வேண்டும் என்றே தேவையற்ற ஆய்வுகள் செய்து அதன் மூலமாக கப்பல் செல்வதை தாமதப்படுத்துகிறது. அதனால் ரஷ்யா இந்த கப்பல்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆதரவு அளிக்காமல் இருப்பதினால் ஈரானுடன் ரஷ்ய இராணுவ உறவுகளை பலப்படுத்தி வருகிறது என அவர் முன்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உக்ரேனும் இஸ்ரேலும் தற்போது முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கின்றது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |