Categories
தேசிய செய்திகள்

இதுவரை 5 லட்சம் பேருக்கு…. தடுப்பூசி போடப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |