Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்…. கேரளாவில் ருசிகரம்…!!!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு தொகை 12 கோடி ரூபாய்  ஆகும். இந்த பரிசுத்தொகை குழுக்கல் நிகழ்ச்சியில் கேரள மாநில நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தார்.

அதில் கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு என்ற பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெயபாலன் என்பவருக்கு கஅதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், எனக்கு கொஞ்சம் கடன் இருக்கிறது. அதை அடைக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு இப்போது லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. இந்த பணத்தை நல்ல முறையில் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து லாட்டரி சீட்டில் முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு கமிஷன் மற்றும் வரி போக மீதம் 7.39 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |