Categories
தேசிய செய்திகள்

“இதுவல்லவா காதல்” 35 ஆண்டுகள் காத்திருந்து…. 65 வயது காதலியை மணந்த காதல் மன்னன்…!!!!

மைசூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (65). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பேறு இல்லாததால் அவருடைய கணவர் 30 வயதிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவரை அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா இதை ஏற்க மறுத்துள்ளார்.  தன்னுடைய கணவரை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்று 35 ஆண்டுகளை கழித்துள்ளார் .

தற்போது அவருக்கு வயது 65. இந்த நிலையில் ஜெயம்மா, சிக்கண்ணாவை  திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் .இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் அங்குள்ள குருஜி ஆசிரமம் ஒன்றில் திருமணம் நடந்துள்ளது. இதில் அவர்களுடைய உறவினர்கள் பங்கேற்றுள்ளனர். 35 வருடத்திற்கு பிறகு முதியவர் ஒருவர் தன்னுடைய 65வயது காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |