தீப்பெட்டிகளின் விலை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டியின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஒரு ரூபாய் தீப்பெட்டியில் தற்போது 36 தீக்குச்சிகள் உள்ளதை, விலை உயர்வுக்கு பின் 50 குச்சிகளாக அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப்பெட்டிகளின் விலை 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உயர்த்தப்படுகிறது.தீப்பெட்டிகளின் விலை உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Categories