Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவும் இந்தி திணிப்பு தான்… ஜிஎஸ்டி அலுவலக ஆணையர் புகார்…!!!

சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்தி தெரியாத ஜிஎஸ்டி அலுவலக ஆணையரை இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதால் அவர் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் பாலமுருகன் என்பவர் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே எழுத படிக்க தெரியும். இந்நிலையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட நபரை இந்தி பிரிவில் பணியமர்த்தாமல் தன்னை அதிகாரிகள் திட்டமிட்டு இந்தி பிரிவில் பணியமர்த்தி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

அவர் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” இந்தியை தாய்மொழியாக கொண்ட வரை இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதும் இந்தி திணிப்பே” என்று அவர் புகார் அளித்திருக்கிறார்.

Categories

Tech |