Categories
மாநில செய்திகள்

இதுவும் போதாதென்றால்…. வெள்ளை பேப்பரில் எழுதி தருகிறேன்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருவதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் எதிர்க்கட்சியினர் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது என்றும், தடுப்பூசி வீணடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன். ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |