Categories
தேசிய செய்திகள்

இதுவே சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம்…. உடனே போங்க….!!!!!

இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசியாகும். ஆக இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்களின் விருப்பத்திற்குகேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப மாத ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்திற்காக நீங்கள் எந்த மருத்துவ சான்றிதழையும் தர வேண்டியதில்லை. ஏனெனில் இந்த திட்டத்தில் மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாய பாதுகாப்பு எதுவும் இதில் இல்லை. இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 30 வயது ஆகும். அதிகபட்சம் 85 வயதாகும். அதே போல குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் என்பது இதில் இல்லை. உங்களது பாலிசி முதிர்ச்சிகென்று இதில் அதிகபட்ச வயது இல்லை. அதோடு இந்த பாலிசியின் சலுகைகளை நீங்கள் மணி பேக்காக பெறலாம்.

உங்கள் ஓய்வூதியமானது ஓரு முறை பிரீமியம் செலுத்தியவுடன் தொடங்கி விடுகிறது. ஓய்வூதியத்தினை செலுத்தும் முறை நீங்கள் எதை தேர்தெடுக்கிறீர்களோ அதை சார்ந்திருக்கும். உங்களால் வருடாந்திர ஓய்வூதியம், அல்லது காலாண்டு, மாதாந்திரம் என்று பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையானது ஆண்டுக்கு 6000 ரூபாயாக இருக்கும். அதிகபட்சமாக 60,000 ரூபாய் வரையில் இருக்கும்.

சில மணி பேக் பாலிசிகளுக்கு எதிராக வங்கிகளில் நாம் கடனை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில் அப்படி ஏதும் பெற முடியாது. சரி வேறென்ன சலுகையெல்லாம் இந்த திட்டத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் இறப்புக்கு பிறகும் நீங்கள் ஓய்வூதியத்தினை தேர்தெடுத்திருந்தால், உங்களுக்கு பிறகு உங்களது துணைக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஆண்டு தொகைக்கான தேர்வானது 7 வேறு வகையான தேர்வுகள் உள்ளன.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:

Sum Assured: 5000000

Lump Sum Premium: 5090000

பென்ஷன்:

வருடாந்திர பென்ஷன்: 302750

அரையாண்டு பென்ஷன்: 148875

காலாண்டு பென்ஷன்: 73750

மாதாந்திர பென்ஷன்: 24479

ஒரு நபர் ஆப்ஷன் ‘A’-வில் 5000000 சம் அஷ்யூர்ட் தேர்வு செய்கிறார் என்றால், அவர் பிரீமியம் தொகையாக ஒரே நேரத்தில் 5090000 கட்ட வேண்டும். இதற்குப் பிறகு அவருக்கு மாதா மாதம் பென்ஷனாக 24479 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை இது கிடைக்கும். இதனை பற்றி தெரிந்து கொள்ள https://licindia.in/Products/Pension-Plans/LIC-s-Jeevan-Akshay-VII என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது பாலிசி எடுக்கும்போது தகுந்த நபரிடம் முழு விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு எடுப்பது நல்லது.

எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில், மற்ற பாலிசிகளை போலவே வருமான வரி சலுகைகள் உண்டு. பிரீமியங்களுக்கான வரி என்பது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் பெறும் ஓய்வூதியம் வரிகுட்பட்டிருக்கும். ஆனால் பிரீமியத்திற்காக நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது. உண்மையில் இந்த திட்டம் முதலீட்டிற்கான சிறந்த திட்டமாகும். இறப்பிற்கு பிறகும் கூட பாதுகாப்பான ஓய்வூதிய சலுகையினை வழங்குகிறது.

Categories

Tech |