பொறியியல் படிப்பில் 2021 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான மாற்றி அமைக்கபட்ட பாடத்திட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வியில் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியப் பாடத்திட்டத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் யோகா, ஆயுர்வேதா, சித்தா, திரைப்படம் மதிப்பிடல், தேசிய வளர்ச்சியில் அரசியல், இலக்கியக் கூறுகள் உள்ளிட்ட ஒன்பது புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இந்த ஒன்பது பிரிவுகளில் கட்டாயம் இரண்டு பாடங்களை இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.பொறியியல் படிப்பில் இத்தகைய தலைப்புகளில் பாடங்கள் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.