Categories
உலக செய்திகள்

இதுவே முதல்முறை…. விண்வெளியின் முதல் தெளிவான போட்டோ…. நாசா வெளியீடு…!!!

பிரபஞ்சத்தை மிக சிறந்த முறையில் மிகச்சிறந்த தெளிவான புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு பெருமை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் மூலமாக விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வழி மண்டலங்கள் இருப்பது தெரிகிறது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக நாசா ஆய்வு மையம் திகழ்கிறது.

விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திடாத  அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா ஈடுபட்டு வரும் நிலையில் புதிய ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் இதுவரை யாரும் கண்டிராத பிரபஞ்சத்தின் அரிய புகைப்படத்தை பிடித்துள்ளது. பிரபஞ்சத்தை மிக சிறந்த முறையில் மிக சிறந்த ரெசல்யூசனில் பிடிக்கப்பட்ட படம் இதுவே என்று நாசா தெரிவித்துள்ளது

Categories

Tech |