Categories
தேசிய செய்திகள்

இதுவே முதல் முறை….. “நேரலையில் நடந்த இலவசங்கள் குறித்த வழக்கு”….. 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…!!

இலவசங்கள் குறித்த வழக்கு நேரடியாக நடைபெற்ற நிலையில், மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக  https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதை ஒட்டி அவரது அமர்வின் விசாரணை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அடுத்த தலைமை நீதிபதி யு.யு லலித்,  ஹேமா கோலி ஆகியோருடன் வழக்கை நேரலையில் விசாரித்தார் ரமணா..

கொரோனா என்பது அனைவரது வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த விஷயத்தில் எந்த ஒரு அமைப்புகள் கூட தப்பவில்லை என்பதை நாம் உறுதியாக சொல்லலாம்.. உச்சநீதிமன்றம் இப்படி முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறும் என்பதை தொடர்ந்து வாய்வார்த்தைகளாக சொல்லி வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் நிர்பந்தம் ஏற்பட்டு, முதலில் அது ஆன்லைனில் ஒன்றரை ஆண்டிலுக்கு மேலாக நடைபெற்றது.. பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயம் மெருகேற்றப்பட்டு வந்தது.. உச்சநீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட நகர தொடங்கியது..

அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்வது என்றெல்லாம் நடந்து வந்த நிலையில் நீதிபதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய முறையை விட்டுவிட்டு டிஜிட்டல் முறையில் மாற தொடங்கினார்கள். இந்நிலையில் இன்றைய தினம் நேரலையில் ஒளிபரப்பி தலைமை நீதிபதி என்.வி ரமணா அதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார். முதல் முதலாக அவரது அமர்வுதான் இந்த நேரலையை நடத்தி காட்டி இருக்கிறார்கள்.. வழக்கறிஞர் வைக்கக்கூடிய வாதம், உச்சநீதிமன்ற நீதிபதி சொல்லக்கூடிய கருத்துக்கள், தீர்ப்பு வாசிக்கக்கூடிய கூடிய முறை மத்திய அரசு, மாநில அரசு, தங்கள் மனுதாரர், எதிர்மனுதாரர் என்று அனைத்து விஷயங்களையும் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் யார் வேண்டுமானாலும் பாக்குமாறு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது பல உலக நாடுகளில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு வழக்கமான விஷயமாகத்தான் இருந்து வரும் சூழலில் இந்தியாவிலும் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக முதல் முதலாக இப்படி ஒரு செயல் என்பது செய்து காட்டப்பட்டிருக்கிறது.. முதன்முதலாக தீர்ப்புகள் என்பதும் வாசிக்கப்பட்டிருக்கிறது..

இந்த வழக்கின் விசாரணையின் போது, இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமரவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு நீதிபதிகளில் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று மறு ஆய்வுக்காக தற்போது 3 நீதிபதிகள் அடங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றி விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.. மேலும் இலவசங்கள் தொடர்பான இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நீதித்துறையின் தலையீட்டின் தேவை என்ன? தேர்தல் நேரத்தில் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சினையை ஆராய நிபுணர் குழுவை நியமிப்பது, இந்த விவகாரத்தில் எந்த அளவிற்கு உதவும் ?போன்ற சில முக்கியமான முடிவுகள் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து அறிவிப்புகளையும் இலவசங்களாக கருத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 4 வாரங்களுக்கு பிறகு வழக்கு பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.

இந்த விஷயத்தில் நிபுணர் குழு அமைக்கலாம் என்று கடந்த வழக்கு விசாரணையில் என்.வி. ரமணா கூறியிருந்தார். மேலும் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் நடத்தக்கூடாது? என்று முக்கியமான முன்னெடுப்பை அவர் சொல்லியிருந்த நிலையில், தற்போது வழக்கு மூன்று நீதிபதிகளில் அடங்கிய  அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.. இதனை நேரடியாகவே பொதுமக்கள், வழக்கறிஞர்கள் யார் வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம்.

இனி உச்ச நீதிமன்றத்தின் வழக்கு அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் என்ன பேசுகிறார்கள், ஏது பேசுகிறார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக  இல்லாமல் நேரடியாக மக்கள் தெரிந்து கொள்ளலாம்.. நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் வெளியே தெரிவதில்லை என்று சொல்லப்பட்ட இந்த நிலையில் இனி யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற விஷயமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |