அமெரிக்கவின் இந்த செயல் பயங்கரவாத நடவடிக்கை என விமான போக்குவரத்து அமைப்பகம் கூறியுள்ளது.
ஈரான் தெஹ்ரானில் இருந்து மஹன் விமானம் நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு சென்றது. அப்போது சிரியா எல்லைப் பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று திடீரென அருகில் கடந்து சென்றது. அதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தின் உயரத்தை குறைத்துள்ளார். அதனால் விமானிகள் சிலர் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பான முறையில் தரை இறங்கியது. போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான் என்றும் ஆனால் 100 மீட்டர் இடைவெளி பின்பற்றியே சென்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அதே சமயத்தில் ஈரான் கூறும்போது, 100 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது என குற்றம் சாட்டியது. ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிஃப் கூறும்போது, ” இத்தகைய நடவடிக்கையானது அந்த கிராமத்தின் அக்கிரமம். அமெரிக்கா சட்டவிரோதமான முறையில் மற்ற நாடுகளுடைய பிராந்தியத்தை ஆக்கிரமிக்கிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கின்ற படைகளை பாதுகாக்க அப்பாவி பொதுமக்கள் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிவில் விமானத்தினை துன்புறுத்துகிறது” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை மந்திரி கூறும்போது, “இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இதுபற்றி நாங்கள் சர்வதேச பொது விமான போக்குவரத்து அமைப்பினரிடம் புகார் அளிக்க உள்ளோம். மேலும் இது அமெரிக்க அரசாங்கத்தினுடைய பயங்கரவாத செயலினை கண்டிப்பதற்கு உதவியாக இருக்கும் என நாங்கள் அனைவரும் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.