காட்டு யானைகள் கூட்டம் கோயமுத்தூர் சின்கோனா பகுதியில் வந்து வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்தியது.
கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா பத்தாம்பத்தி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு அந்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களின் தோட்டங்களையும் சேதப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் நடந்து வருகிறது. அந்தப் பகுதி மற்றும் அதற்கு சுற்றியுள்ள வால்பாறை, சிறுகுன்றா, வாட்டர் பால், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் யானை கூட்டங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் ரேஷன் கடைக்கு புகுந்து சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்தது. இதை அங்கே உள்ளவர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.