உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுஆயுதப் பதற்றத்தை தங்களது மினிட்மேன் வகை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி அதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி திட்டமிட்டிருந்த மினிட்மேன் வகை ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஏனெனில் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை தங்களது ஏவுகணை சோதனை தூண்டும் என கருதி இதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.