Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அண்ணாமலையின் வீக்…. உருப்படியான அரசியல் பேசவில்லை…. திருமா குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் கூறியிருந்தார். இதற்கு பாஜக அண்ணாமலை, தொட்டு பார்க்கட்டும். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். தொட்டுப் பார்கட்டும். வட்டியும், முதலுமாக அவர்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு திமுகவினரிடையே கடும் கோபத்தை உண்டாகி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், பாஜக மீது கை வைத்தால் வட்டி முதலுமாக திருப்பித் தரப்படும் என்று அண்ணாமலை கூறியிருப்பது அவருடைய பலவீனத்தைக் காட்டுகிறது. கவனயீர்ப்புக்காக பாஜக வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறது. அனைவரும் தங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறிய அவர் பாஜகவினர் உருப்படியான அரசியல் பேசவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |