Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அநியாயம்; அக்கிரமம்… அதிமுக வரலாற்றில்…. எங்கேயாவது இப்படி நடந்தது உண்டா ?

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்திலேயே பேசி,  காவல்துறையில் சென்று ஒரு தலைவரே  பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று கொடுத்த வரலாறு இதுவரை அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் நடந்ததில்லை.  காவல்துறையில் அவருடைய லெட்டர் பேடில்  கடிதத்தில் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிற போது ஒரு வார காலமாக அங்கே காத்துக்கிடக்கின்றன தொண்டர்களிடையே மனநிலை என்னவாக இருக்கும்.

பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்து ஜனநாயக ரீதியாக 4 1/2 மணி நேரம் மாவட்ட செயலாளர்கள் அவருடைய முன்னிலையிலே விவாதிக்கப்பட்டது. அதில் ஜனநாயக முறைக்கு  விரோதமாக ஏதும் நடைபெற்றதா ? கருத்துகளை சொல்கிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள்,  தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற  தலைமை கழக நிர்வாகிகள், அவர்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு சீர்திருத்தம் செய்ய வேண்டும், எங்களுக்கு ஒற்றை தலைமை வேண்டும், எங்களை வழிநடத்துவதற்கும், நாங்கள் நம்பிக்கைக்குரிய தலைவராக தேர்வு செய்வதற்கும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்.

அதை பொதுக்குழுவில் விவாதிப்பதற்கு என்ன சட்டவிரோதம் இருக்கிறது ?   ஜனநாயகத்தில்  அதனுடைய அடித்தளத்தை தகர்கின்ற வகையில் பொதுக்குழுவே நடைபெறக் கூடாது என்று எந்தத் தலைவராலும் இதுவரை கேட்டதுண்டா ? காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது உண்டா ? இந்த வரலாற்றை நாம் பார்த்தது உண்டா ? இந்த அநியாயம்,  அக்கிரமம் எங்கேயாவது நடந்தது உண்டா ? அப்படி அதை தடுத்து நிறுத்த அத்தனை முயற்சிகளும் எடுத்துவிட்டு, தோல்வி பெற்றதற்கு பிறகு அந்த பொதுகுழுவிற்கே வருகிறார் என தனது பேட்டியில் தெரிவித்தார்.

Categories

Tech |