மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை உள்ள சிறப்பம்சங்கள் குறித்து நேற்று மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.
அதில்.. மத்திய அரசின் புதிய கொள்கையானது மக்களுக்கு பயன்படாத கல்விக் கொள்கை என விமர்சித்துள்ள முதல்வர் நாராயணசாமி, இது புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், மக்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்தை கேட்டு தான் அதனை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.