Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ”அம்மா அரசு” இல்லை…. இது ”சும்மா அரசு”…. அங்க போய் சீட் கேட்க… காட்டமான விமர்சனத்தால் அதிமுக ஷாக்..!!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியதாக கூறிய கருணாஸ், சசிகலா அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறிய விஷயத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலே முக்குலத்தோர் புலிப் படையையும், கருணாசையும் அறிமுகப்படுத்தி  எனக்கு சிவாரிசு செய்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக அன்றையிலிருந்து இன்றுவரை…. அவர் நான் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர் என்கின்ற அடிப்படையிலே…. நான் ஒரு சமுதாய அமைப்பு நடத்துகின்ற காரணத்தினால்….

தொடர்ந்து அவருக்கு என்னுடைய ஆதரவை நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன், இந்த நிமிடமும் அது தொடரும், என் வாழ்நாள் முழுவதும் அது தொடரும், அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் அவர் எடுத்து இருக்கக்கூடிய இந்த முடிவு என்பது அவரிடத்திலே தான் கேட்க வேண்டும். அதிமுகவில் நான் சீட்டு கேட்கவில்லை. அதிமுகவில் சீட் கேட்கும் அளவுக்கு கருணாஸ்ஸோ, முக்குலத்தோரோ மானங்கெட்டு எல்லாம் போக வில்லை.

என்னை பொறுத்தவரை அதிமுக எவ்வளவு பெரிய கட்சி என்பது அம்மா இருக்கும் பொழுது வரை தான்…. அம்மாவிற்கு பிறகாக…  அம்மாவினுடைய ஆட்சி என்று சொல்லிக்கொண்டு…. அம்மாவினுடைய எண்ணங்களுக்கும்….  அவர்களுடைய நோக்கங்களுக்கும்…. அம்மாவிற்கு இருந்த அந்த தைரியம் இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு இல்லை…. ஆகவே இந்த அரசை அம்மா அரசு என்று சொல்லுவது தவறு… இது சும்மா அரசு என்று தான் சொல்வது சரியாக இருக்கு என கருணாஸ் விமர்சித்தார்.

Categories

Tech |