Categories
தேசிய செய்திகள்

“இது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று”…. கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்….!!!!

கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், பரிசுப் பொருட்களை வழங்கி செய்யும் மதமாற்றம் குறித்து மாநில அரசுகளிடமிருந்து தகவல்களை திரட்டி வருகிறோம்.

ஆகவே விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும்” என கோரினார். இந்நிலையில் நீதிபதிகள், “பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவை அளித்து செய்யும் மத மாற்றம் மிகவும் ஆபத்தானது ஆகும். கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது” என்று தெரிவித்தனர். அத்துடன் இது குறித்து மாநிலங்களிடமிருந்து விரிவான தகவலை பெற்று பிரமாணபத்திரம் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Categories

Tech |