Categories
Uncategorized

இது அரசுக்கு… ‘வெட்கக்கேடான செயல்’… கொந்தளித்த ராகுல்காந்தி… பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகியவை ஒப்புக் கொண்டுள்ளன. இந்நிலையில் அந்த மாநிலங்களின் முதல் மந்திரிகள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசு உறுதி செய்தது. கொரோனாவாலும் பிரதமராலும் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. பிரதமர் காப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வரி குறைப்பு செய்துள்ளார். அது மட்டுமன்றி தனக்காக 8 கோடி ரூபாய் மதிப்பில் 2 விமானங்கள் வாங்கியுள்ளார்.ஆனால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பணம் இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று அனைத்து மாநிலங்களிலும் நிதி மந்திரி கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட மாநிலங்களில் உள்ள மக்களை பார்த்து நான் கேட்கிறேன்.பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்-மந்திரி ஏன் அடகு வைக்கிறார்?”என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்கும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக பேசுங்கள் என்ற ட்விட்டர் பிரசாரத்தை நேற்று காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அதில் ராகுல் காந்தி கூறுகையில், “குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதுதான் மாநில அரசின் வேலை. ஆனால் மாநில அரசு அதனை செய்யாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போட்டு வருகிறது.மாநில அரசின் செயல் மனிதத்தன்மை இல்லாததாகவும் நெறிமுறை அற்றதாகவும் இருந்துவருகிறது.

இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்”என்று அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறுகையில், “நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை காதுகொடுத்து கேட்பதற்கு பதிலாக, அவர்கள் மீதே பழி சுமத்துகிறார்கள். இது வெட்கக்கேடான செயல். அதற்காக பெண்கள் மவுனமாக இருக்க மாட்டார்கள்.ஒரு பெண் பாதிக்கபட்டால் அதற்கு லட்சக்கணக்கான பெண்கள் குரல் கொடுப்பார்கள்.பெண்களின் பாதுகாப்பை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |