பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கையான ஒன்று. எனினும் ஓரிரு மரங்களில் அதிசயமாக கிளைகள் முளைப்பது உண்டு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பல்வேறு கிளைகளுடன் 2 பனை மரங்கள் இருக்கின்றன. மொத்தம் இருந்த 3 மரங்களில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பனை மரம் அழிந்து போனது.
தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் இருக்கின்றன. இதில் 16 கிளைகள் கொண்ட தனியொரு மரமே தோப்பு போன்று காட்சி அளிக்கிறது. இருந்தாலும் இந்த 3 மரங்களுமே இதுவரையில் காய் காய்த்தது இல்லை என்பது வேதனையான ஒன்று. இந்த அதிசய பனை மரங்களில் இருந்து புதிய மரக்கன்றுகளை உருவாக்க முடியவில்லையே என்பது கிராமத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது..