வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியில் வசித்துவந்தவர் சேகர். கூலி வேலை செய்துவரும் இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சென்ற சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார்.
இந்நிலையில் நேற்று காலை சேகரின் மனைவிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கணவரின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அஞ்சலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதன்பின் அஞ்சலியின் உடலும், அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது. கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து கணவன் மற்றும் மனைவி போன்றோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்வையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.