Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது அவமானமில்லையென்றால்…. வேறு எது அவமானம்…? அமரீந்தர் சிங் பதிலடி…!!!

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதன் காரணமாக, தற்பொழுது திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக சரண்ஜித் சிங் சன்னி மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவரைப்போல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பலரும் தங்களது பணியிலிருந்து விலகி உள்ளனர். இந்த வேலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் அவர் பாஜகவில் சேரப் போவதில்லை எனவும், தொடர்ந்து காங்கிரஸில் பணியாற்ற விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் அமரீந்தர் சிங் அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் எந்த உண்மையும் இதில் காணப்படவில்லை. கேப்டன் ஒருவித அழுத்தத்தில் இருப்பதை தற்பொழுது அவர் தெரிவித்து வரும் கருத்துகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இவர் தனது முடிவினை மாற்று யோசனை மேற்கொள்ள வேண்டும். அமரீந்தர் சிங் அரசையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைப்பதற்கு பண்ணை வீட்டிலிருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்” என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக என்னை அவமானப்படுத்த கட்சி விரும்பவில்லை என்றால் நவ்ஜோத் சிங் சித்துவை விமர்சனம் செய்ய ஏன் அனுமதி கொடுத்தார்கள்? இது அவமானமாக கட்சிக்கு தெரியவில்லை என்றால், வேறு எதை அவமானமாக கருதுவார்கள்? என்ற கேள்வியை வைத்துள்ளார். அரசியல் அரங்கில் இவரது இந்த கருத்தால் மிகவும் பரபரப்பு நிலவியுள்ளது.

Categories

Tech |