Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இது அவரா இருக்குமோ?…. தினசரி பிரசாதம் சாப்பிட கோவிலுக்கு வரும் காகம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில்  27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில்  27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான விருட்சகங்கள் இருக்கிறது. இந்த நிலையில் கோவில் அமைய வழிகாட்டிய சித்தர் சுவாமிகள் 2018 ல் முக்தி அடைந்தார்.

இதையடுத்து தினசரி கோவிலுக்கு வரும் காகம் ஒன்று, அர்ச்சகர் கோபி கிருஷ்ணன் கைகளில் கொடுக்கும் பிரசாதத்தைக் கடந்த 4 வருடங்களாக சாப்பிட்டுச் செல்கிறது. கோவிலில் தினசரி காலை 8:00 மணிக்கு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் கோவில் பிரகாரத்தில் காகம் அமர்ந்திருக்கும். இது தொடர்பாக கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது,  காகம், பூஜை முடிந்ததும் கா… கா… எனக் கரைந்தவாறு அர்ச்சகரைக் கூப்பிட தொடங்கும்.

அதன்பின் அர்ச்சகரும் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைத்த பிரசாதத்தை காகத்திற்கு தினசரி கொடுக்கத் தொடங்கினார். பின் காகம் அர்ச்சகரான கோபி கிருஷ்ணனின் கையிலுள்ள பிரசாதத்தை சாப்பிடத் துவங்கியது. இந்த காகம் சென்ற 4 ஆண்டுகளாக தினசரி காலை, மதியம் பூஜை நேரங்களில் கோவில் வளாகத்தில் வந்து அமர்ந்து பூஜைகள் முடிந்ததும், அர்ச்சகர் தரும் பிரசாதத்தை சாப்பிட்டுச் செல்கிறது. இப்போது கோவிலுக்கு வந்து பிரசாதம் சாப்பிடும் காகங்களின் எண்ணிக்கையானது நான்காக உயர்ந்துள்ளது. இது கோவில் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தியடைந்த சித்தர் சுவாமிகள் தான், காகம் ரூபத்தில் வருவதாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |