நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி பகுதியில் வைத்து தமிழ் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜெயமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வித்யபாரதி, அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பேராசிரியர் ஜெயமணி “ஆண் சமூகமே என் பாதுகாப்பு உன் கடமை” என்ற தலைப்பில் பேசியதாவது. இன்று பெண்கள் மீதான வன்முறை நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக வரும் மிக பெரிய ஆபத்துகளை சுட்டிக்காட்டி பெண்களை பாதுகாப்பது ஆண்களின் கடமை என அவர் கூறியுள்ளார்.