ஆண்கள் மற்றும் பெண்களை கவரும் அடிப்படையில் இந்த உலகில் பெரும்பாலான ஆடை அலங்காரங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வப்போது பெண்களுக்கு பல்வேறு விதமான புதுப்புது ஆடை வடிவமைப்புகள் வருவது உண்டு. அதேபோன்று ஆண்களுக்கும் பல்வேறு விதமான பேஷன்கள் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல கிராப் டாப்ஸ் என்ற ஆடை ட்ரெண்டாகி வருகிறது.
இந்த கிராப்டாப்ஸ் தற்போது பெண்களுக்கான விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற டாப்கள் பெண்களுக்கான பேஷனாக மாறுவதற்கு முன்னதாவே ஆண்களின் ஆடை விருப்பங்களாக இருந்துள்ளன. ஆகவே பழைய பேஷன் ட்ரெண்ட் இப்போது மீண்டும் ஒரு புதுப்பிப்புடன் சந்தைக்கு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்காக போகும் ஆண்கள் அதிகமாக இந்த கிராப் டாப் உடையை தான் அணிந்து செல்வார்கள். ஆனால் அதற்கு பிறகு ஆண்கள் இந்த கிராப் டாப் உடையை அணிய மறுத்துவிட்டனர். அதனால் தான் பெண்கள் படிப்படியாக இந்த கிராப் டாப் டிரஸ்சை அவர்களுடைய ட்ரெண்டாக மாற்ற தொடங்கினார்கள். ஒருவேளை ஆண்கள் அந்த கிராப் டாப் உடையை அணிந்து வந்திருந்தால் இருந்தால்?, தற்போது ஆண்களும் இந்த கிராப் டாப் ட்ரெஸ் அணிவதை நம்மால் காண முடிந்திருக்கும்.