Categories
உலக செய்திகள்

“இது ஆரம்பம் மட்டுமே”…. பின்வாங்கும் ரஷ்ய படைகள்….. கெர்சனில் தீவிரமடையும் போர்….!!!!!!!!

உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம்  சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது.

இந்த சூழலில் தெற்கு உக்ரைனின்  கெர்சன்  பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய  இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில்  100 க்கும் மேற்பட்ட ரஷ்ய  வீரர்கள் மற்றும் ஏழு டாங்கிகள் அளிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவத்தில் தெற்கு கட்டளை கூறியுள்ளது. இது தொடர்பாக கெர்சன்பிராந்திய கவுன்சிலிங் முதல் துணைத் தலைவர் யூரி சோபாலெவெஸ்கி டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் இது ஆரம்பம் மட்டுமே என கூறியுள்ளார். ஏற்கனவே டினி ப்ரோ ஆற்றின் வழியாக கெர்சனுக்கான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கிழக்கு மற்றும் கிருமியா போன்றவற்றிலிருந்து ரஷ்ய படைகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என உக்ரைனின் தெற்கு கட்டளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |