தேனியில் இருக்கும் வைகை அணைக்கு நீரின் வரத்து இல்லாததால் அதில் நீர்மட்டம் 63.76 அடியாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் வைகை அணை 71 அடி உயரத்தை கொண்டது இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக இருந்ததால் அதனுடைய நீரின் மட்டம் முழு கொள்ளளவையும் தொட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 64 அடியாக இருந்தது.
இந்நிலையில் அணையிலிருந்து சேடப்பட்டி, தேனி, மதுரை உட்பட சில பகுதிகளுக்கு 72 கன அடி நீர் குடிநீர் வசதிக்காக திறக்கப்படுகிறது. இதனால் அணையின் மட்டம் மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து முழுவதுமாகவே நின்றுள்ளது. இதனால் தற்போது அணையின் நீரின் மட்டம் 63.76 அடியாக உள்ளது.