நெல்லையில் பொதுமக்கள் லாரியை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்திலிருக்கும் கிராமத்திற்கு அருகே கல்குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியை சுத்தம் செய்யும் விதமாக அங்கிருந்த மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு, அதனை அகற்றும் பணி நடைபெற்றது. இதனிடையே அப்பகுதியிலிருக்கும் விவசாய நிலங்கள், அங்கு கல்குவாரி அமைத்தால் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.