விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!
இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?
பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!
— M.K.Stalin (@mkstalin) August 10, 2020