Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இது இந்தியாவுக்கு வேட்டு வைக்கும் செயல்”…. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில், இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது? ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப் பாட்டையும் உருவாகாது? ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்.

ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவதே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையை பழுதாகும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்து வருகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |