Categories
மாநில செய்திகள்

இது இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!!!

விருதுநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணை பள்ளி மாணவர்கள் 4 பேர், தி.மு.க நிர்வாகிகள் உட்பட 8 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இது தொடர்பாக விருதுநகர் போல்ஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது, பள்ளி மாணவர்கள் 4 பேர் என்று 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் ஹரிஹரனும் 22-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இச்செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் சம்பவத்திற்கு கிடைக்கும் நீதி, பிற வழக்குகளில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும். பாலியல் வன்கொடுமை குறித்த புகார் வந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |