Categories
சினிமா தமிழ் சினிமா

இது இன்னும் முடியல… இனிமே தான் ஆரம்பமே… ‘பீஸ்ட்’ மரண மாஸ் அப்டேட்… ரசிகர்கள் செம குஷி…!!!

‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 65 படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பீஸ்ட் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1406982760330264576

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22, நள்ளிரவு 12 மணிக்கு பீஸ்ட் செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸாக உள்ளது. மேலும் விஜய்யின் பிறந்தநாளுக்காக செம மாஸான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |