அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் யாருக்கும் இல்லை என்று கூறினார். மேலும் அவர் குரங்கம்மை நுழையாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகத்தில் சிறு கொப்பளங்கள் இருந்தால் மக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பல்வேறு நாட்டினர் வருவதால் அவர்களுக்கு கொரோனாவுடன் குரங்கமை பரிசோதனை செய்யப்படுகிறது என்று கூறினார்.