Categories
தேசிய செய்திகள்

‘இது இருந்தா மட்டும் எங்க நாட்டுக்குள்ள வாங்க’… வெளிநாட்டு பயணிகளுக்கு… மத்திய அரசு போட்ட ரூல்ஸ்…!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது சர்வதேச விமான போக்குவரத்துக்கு இம்மாத இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு சில கட்டுப்பாடுகளையும், மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் மற்றும் இந்தியாவுடன் பரஸ்பர ஏற்பாடு செய்யப்பட்ட நாடுகளிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம். ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் பரிசோதனை செய்து மாதிரிகளை வழங்க வேண்டும். வீட்டில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். கொரோனா அறிகுறியற்ற நபர்களே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 25ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். பின்னர் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |