இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காலா இளைஞர்கள் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதில் ஒரு சிலர் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் ஒருசிலர் சில விஷயங்களை பார்த்து சீரழிந்து வருகின்றனர். அந்தவகையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கு ஒரு சில இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் இளைஞர்களின் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு மருத்துவர்களின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்கும் மருந்தகங்களின் உரிமம் ரத்தாகும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், அவர்களுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது? என்பதை கவனித்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை சரியான பாதைக்கு வழிநடத்துங்கள்.